அனந்தி சசிதரனின் பதவி பறிபோகிறது

ஆசிரியர் - Admin
அனந்தி சசிதரனின் பதவி பறிபோகிறது

இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னை கட்சி  உறுப்புரிமையில் இருந்து  நீக்குவதால்  தனது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகாமல் இருப்பதற்கு வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் முன்னாயத்த நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளார்.

தற்போது ஜெனிவா கூட்டத்தொடருக்கு சென்றுள்ள நிலையில் தனது நிலைமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உதவியை  நாடியுள்ளார்.எனினும் பதவியைக் காப்பாற்றுவதற்கு நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே வழி என்று தேர்தல்கள் ஆணைக்குழு இதன் போது  பதிலளித்துள்ளது.

 கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில்    இவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக  முடிவு செய்யப்பட்ட நிலையில் அவரது மாகாண சபை உறுப்பினர் பதவியும் பறிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அனந்தி சசிதரனின் கருத்தை அறிவதற்காக அவரது அலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த    2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில்    ஆனந்தி சசிதரன் போட்டியிட்டு  இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் (87இ870) பெற்று வட மாகாண சபைக்குத் தெரிவாகி இருந்தார்.

பின்னர் இவருக்கு மகளிர் விவகாரம் புனருத்தாபனம் சமூக சேவைகள் கூட்டுறவு உணவு விநியோகம் வழங்கல் மற்றும் விநியோகம் கைத்தொழில் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு அமைச்சு பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தககது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருக்கோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவியே இவர் ஆவார். எழிலன் 2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து இலங்கை ஆயுதப் படைகளிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனதாக தற்போது முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு நடைபெற்று வருகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு