யாழ்.மாவட்டத்தில் தொடரும் மழை..! மாலை 6.30 வரையான தகவல்களின்படி மாவட்டத்தில் 9346 குடும்பங்களை சேர்ந்த 31703 பேர் பாதிப்பு, 48 வீடுகள் முற்றாக நாசம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் மாலை 6.30 மணிவரையான தகவல்களின் பிரகாரம் 9346 குடும்பங்களை சேர்ந்த சுமார் 31 ஆயிரத்து 703 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா கூறியுள்ளார். 

அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 32 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 879 குடும்பங்களை சேர்ந்த 3189 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 48 வீடுகள் முழுமையாகவும், 1826 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் ரீ.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio