நிறை போதையில் நாக பாம்பை பிடித்து விளையாடியவர் பாம்பு கடித்தது கூட தொியாமல் மரணம்..! யாழ்.உடுப்பிட்டியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வெளியன்தோட்டம் பகுதியில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் பாம்பு தீண்டியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் மகேஸன் தவம் என்ற 55 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மதுபோதையில் வீட்டுக்கு சென்றிருந்த குறித்த நபர் வீட்டிற்கு வந்தவர்

நாக பாம்பு ஒன்றை பிடித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பின்னர் பாம்பை விட்டுவிட்டு துாங்க சென்றவர் திடீரென நெஞ்சு வலியால் துடித்ததுடன் தண்ணீர் கேட்டுள்ளார். 

சுமார் 3 செம்பு தண்ணீரை குடித்தபோதும் நெஞ்சுவலி ஓயாத நிலையில் பருத்துறை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார். 

அவருடைய கையில் பாம்பு தீண்டியதற்கான அடையாளம் காணப்படுவதாக ஆரம்ப விசாரணைகளில் தொியவந்துள்ளது. இதேவேளை உடற்கூற்று பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 

Radio