வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயதான சிறுமி..! மரணத்தில் சந்தேகம் தீவிர விசாரணையில் பொலிஸார், யாழ்.பருத்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறை- சாரையடி பகுதியில் 07 வயதான சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி வீட்டில் தனிமையில் இருந்ததாகவும் மீண்டும் பெற்றோர் வீட்டுக்கு திரும்பிவந்து பார்த்தபோது 

சிறுமி துாக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாக பருத்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருக்கின்றார். 

சிறுமி துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முறையில் கடுமையான சந்தேகம் தொிவித்துள்ள பொலிஸார் பிரேத பரிசோதனை அறிக்கையினை எதிர்பார்த்துள்ளனர். 


Radio