வேலியை கொளுத்திய பொலிஸார்..! இளைஞர்கள் கூடியதால் ஓட்டம்..

ஆசிரியர் - Editor I

கார்த்திகை விளக்கீட்டு தினமான இன்று மாலை இனந்தெரியாதோர் சிலர் அராலி மத்தி வீதியில் வாகன ரயர் ஒன்றினை கொழுத்தி வைத்தனர். 

இதன்போது அவ்வீதியால் வந்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் ரயரினைத் தூக்கி அருகில் இருந்த வேலியில் வீசியுள்ளனர். இதனால் வேலி தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

இதனை அவதானித்த வீதியால் சென்ற ஒருவர் ரயரினை வெளியே எடுத்து தீயினை அணைக்க முற்பட்டவேளை ரயரை தூக்கி வீசிய பொலிஸார் 

அவரை மிரட்டி தீயினை அணைக்க வேண்டாம் என்று கூறினார். அருகில் இருந்த இன்னொரு பொலிஸார் தீயை அணைக்கும்படி கூறினார்.

இதன்போது அவ்வூர் இளைஞர்கள் ஒன்றுகூடியவேளை பொலிஸார் அவ் இடத்தினை விட்டு அகன்று சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

Radio