யாழ்ப்பாணம் முடக்கப்படுகிறதா..? மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் மக்களுக்கு விளக்கம்..?

ஆசிரியர் - Editor I

யாழ்.தீவகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரால் யாழ்.நகரப்பகுதி உள்ளிட்ட பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்டம் முடக்கப்படும்.

என செய்திகள் வெளியானபோதும் அதில் உண்மையில்லை. எனவும் அவ்வாறான தீர்மானங்கள் எவையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும்,

மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

யாழ்ப்பாணத்தை முடக்கவுள்ளதாக பத்திரிகைகளில் தவறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ள. குறித்த செய்தியின் ஊடாக பொது மக்கள

குழப்பமடையத் தேவையில்லை எனவும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார். குறிப்பாக காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் 

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரிடம் நேரடியாக தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் 

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு