யாழ்.காரைநகர் கொரோனா தொற்றாளரால் அச்சத்தில் உறையும் யாழ்.நகரம், மேலும் இரு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டது, பலர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் கொரோனா தொற்றாளரால் அச்சத்தில் உறையும் யாழ்.நகரம், மேலும் இரு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டது, பலர் தனிமைப்படுத்தலில்..

யாழ்.காரைநகரில் தொற்றுக்குள்ளாவர் யாழ்.நகரில் உள்ள வெதுப்பகம், மற்றும் ஒரு புடவை விற்பனை நிலையம் ஆகியவற்றுக்கு சென்றுவந்த நிலையில் குறித்த இரு வர்த்தக நிலையங்களும் மாநகர மருத்துவ அதிகாரி பாலமுரளியின் அறிவுறுத்தலுக்கமைய முடக்கப்பட்டுள்ளன. 

மேலும் குறித்த நோயாளி சென்றுவந்த இடங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக யாழ்.மாநகர சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர். மேலும் திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மூடப்பட்டுள்ளதுடன், 

அங்கிருந்த 15 பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவிருக்கின்றது. அதேபோல் நகரில் உள்ள பிரபல வெதுப்பகத்திற்கு கடந்த 21ம் திகதி நோயாளி சென்றபோது அங்கு கடமையில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு

அவர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கின்றது. மேலும் யாழ்ப்பாணம் காரைநகர் இடையே சேவையில் ஈடுபடும்  NG 2019 தனியார் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த தொற்றாளர் சென்றுவந்த தனியார் வைத்தியசாலை, உள்ளிட்ட 4 வர்த்தக நிலையங்கள்

மற்றும் 3 வீடுகள், ஒரு அரசு வைத்தியசாலை, ஒரு பொதுச்சந்தை, ஒரு மதுபான விற்பனை நிலையம் ஆகியன இன்று காலை மூடப்பட்டதுடன், 36 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Radio