யாழ்.தீவகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் நுாற்றுக்கணக்கானோருடன் பழகியுள்ளனராம்..! பொதுமக்களின் உதவியை கோருகிறது சுகாதார பிரிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் நுாற்றுக்கணக்கானோருடன் பழகியுள்ளனராம்..! பொதுமக்களின் உதவியை கோருகிறது சுகாதார பிரிவு..

யாழ்.காரைநகரில் கொரோனா தொற்றுக்குள்ளான கனகலிங்கம் கனகேஸ்வரன் (வயது 40) என்பவர் யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் நடமாடியுள்ளதுடன், சுமார் நுாற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் பழகியிருந்ததாக கூறப்படும் நிலையில், 

குறித்த நபருடன் பழகியவர்கள், குறித்த நபர் சென்றுவந்த இடங்களில் உள்ளவர்கள் உடனடியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு பிரதேச மருத்துவ அதிகாரி கோரிக்கை விடுத்திருக்கின்றார். மேலும் குடும்பத்தினதும், சமூகத்தினதும் நலன் கருதி இதனை செய்யுமாறும் அவர் கோரியுள்ளார். 

மேலும் யாழ்.வேலணையில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த ஊழியருடன் தொடர்புடையவர்களுக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அங்கு 25 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

அங்கும் தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்புகளை பேணியவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு பிரதேச மருத்துவ அதிகாரியால் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. 

Radio