யாழ்.சங்கானையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..! வயோதிபர்கள் மீது காடையர்கள் வாள்வெட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சங்கானையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..! வயோதிபர்கள் மீது காடையர்கள் வாள்வெட்டு..

யாழ்.சங்கானை தேவாலய வீதியில் உள்ள வீடொன்றல் இருந்த வயோதிபர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய இனந்தொியாத ரவுடி கும்பல் தப்பி சென்றுள்ளது. 

சம்பவத்தில் மார்க்கண்டு வேலாயுதம் (வயது 64) தங்கராஜா புவனேஸ்வரி (வயது 50) என்ற இரு வயோதிபர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான வீட்டை பராமரித்துக் கொண்டிருக்கும் குறித்த வயோதிபர்கள் மீது நேற்று நள்ளிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் பொலிஸார் வாள்வெட்டுக்கான காரணம் தொடர்பில் உறுதியான தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை. 

எனவும் அங்கு கொள்ளை இடம்பெற்றமைக்கான தகவல்களும் கிடைக்கவில்லை. என கூறியுள்ளனர். 

Radio