யாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் தமிழகத்தில் கரை ஒதுங்கிய நிலையில் கைது..! மீனவரா? கடத்தல்களுடன் தொடர்புடையவரா? பலகோணங்களில் விசாரணை..

ஆசிரியர் - Editor I

சீரற்ற காலநிலையினால் தமிழகம் நாலுவேதபதி கடற்கரையில் கரை ஒதுங்கிய யாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

வல்வெட்டித்துறையை சேர்ந்த விஜயமூர்த்தி வயது 23 என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த நபர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காலநிலை சீரின்மையினால் 

படகு கரை ஒதுங்கியதாக கூறப்படுகின்றது. ஆனாலும் அவருடைய படகில் மீன்பிடி உபகரணங்கள் எவையும் இல்லை. என கூறப்படுவதுடன் குறித்த நபர் கடத்தலில் ஈடுபடும் நோக்கில் தமிழகம் சென்றாரா?

என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

Radio