கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சாரதி சுகாதார பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்டபோதும் மறுநாளே கொழும்புக்கு பயணம்..! மக்கள் விசனம்..

ஆசிரியர் - Editor I

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த ஹயஸ் வாகன சாரதியை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியபோதும் மறுநாளே அவர் மீண்டும் கொழும்புக்கு பயணமாகியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

கொழும்பிலிருந்து யாழ்.கொக்குவில் பகுதிக்கு கடந்த 22 ஆம் திகதி இரவு கொக்குவில் கல்லூரி வீதியில் உள்ள வீடொன்றிற்கு வந்த ஹயஸ் வாகனம் சாரதி சுகாதாரப் பிரிவினரால் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மறுநாள் 23 ஆம் திகதி இரவு கொழும்புக்கு சென்றுள்ளார். 

இந்த ஹயஸ் வாகனத்தில் வேறு எவரும் வந்தனரா என்பது தொடர்பில் தெரியவில்லை. வந்திருந்தால் அவர்கள் எங்கே இறங்கினர் என்பதையும் அறியவேண்டும். இந்த விடயம் சம்பந்தமாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வாகன சாரதிக்கு கொரோனா தொற்று இருக்குமானால் நிலைமை மோசமாக இருக்கும் என்று அந்தப் பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு