ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..! சிறப்பு விடுமுறை குறித்தும் விளக்கம்..

ஆசிரியர் - Editor I

வடமாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டியதில்லை. என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

நாளைய தினம் மேல் மாகாணம் தவிர்ந்த சகல பகுதிகளிலும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாகாண கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் (மேல் நிலை பாடசாலைகளுடன் இயங்கும் ஆரம்ப பிரிவுகள் உள்பட) பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டியதில்லை.

எனினும் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பாக கணிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்கள் பாடசாலை அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேல் மாகாண உள்பட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வடக்கு மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உரிய அறிவித்தலை வழங்கினால்

அவர்களுக்கும் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Radio