மன்னார் வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட கஞ்சா..! பருத்துறை கடலில் படகை முற்றுகையிட்ட மதுவரி திணைக்களம், யாழ்.உரும்பிராய் இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor I
மன்னார் வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட கஞ்சா..! பருத்துறை கடலில் படகை முற்றுகையிட்ட மதுவரி திணைக்களம், யாழ்.உரும்பிராய் இளைஞன் கைது..

யாழ்.பருத்துறை - முனை கடற்பகுதியில் சுமார் 20 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

மன்னார் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மன்னார் மதுவரி திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பருத்துறை கடலில் படகை முற்றுகையிட்ட மதுவரி திணைக்களத்தினர்

யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த நபர் ஒரு முன்னாள் போராளி என கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கஞ்சா ஆகியன 

பருத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Radio