யாழ்.கரவெட்டியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவுமாறு கோரிக்கை..!

ஆசிரியர் - Editor I

யாழ்.கரவெட்டி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்ககூடியவர்கள் வழங்குமாறு பிரதேச கிராமசேவகர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

குறிப்பாக கரவெட்டி வடக்கு(J/364), கரவெட்டி மேற்கு(J/363) கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 56வீடுகளில் 97 குடும்பங்களை சேர்ந்த 277பேர் பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 வீடுகளில் உள்ள 52 குடும்பங்களை சேர்ந்த 151 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கரவெட்டி மேற்கில் 6 குடும்பங்களும் கரவெட்டி வடக்கில் 42 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட 52 குடும்பங்களுக்கு 14 நாட்களுக்கான உலர் உணவு வழங்கப்பட வேண்டிய தேவைகள் உள்ளது. இவர்களின் விபரங்கள் பதிவிடும் வரை அரச நிவாரணம் சம்மந்தமான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 

பொது அமைப்புகள் வலிந்துதவும் அமைப்புக்கள், விளையாட்டுக் கழங்கள், தொண்டு நிறுவனங்கள் என்பவற்றை உதவிக் கரம் நீட்டுமாறு கேட்கப்பட்டுள்ளது. உதவ விரும்புவர்கள், கீழ் காணும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு உதவலாம். 

தொடர்புகளுக்கு – 

கிராம அலுவலர் கரவெட்டி மேற்கு -   0776690208 

கிராமஅலுவலர் கரவெட்டிவடக்கு -   0773180029


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு