10 வயது சிறுமி உட்பட யாழில் அடையாளம் காணப்பட்ட 6 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் மேலதிக தகவல் வெளியானது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 6 பேரும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் தொற்றுக்குள்ளானமை தொியவந்துள்ளது. 

குறிப்பாக உடுவில் பகுதியில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் கணவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியான நிலையில் மாளிகாவத்தையில் வசிக்கும் குறித்த பெண்,

யாழ்ப்பாணம் உடுவில் - அம்பலவாணர் வீதியில் உள்ள தாய் வீட்டக்கு வந்து தங்கியிருந்த நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது 

குறித்த பெண்ணுக்கும் அவருடைய 10 வயதான மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 

அவர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளது. மேலும் வேலணை மற்றும் நல்லுார் பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட 4 கொரோனா தொற்றாளர்களும்  கொழும்பு -வெள்ளவத்தை பகுதியில் உள்ள 

யாழ்.ஹோட்டல் என்ற உணவகத்தில் பணியாற்றியுள்ளனர். குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அங்கு பணியாற்றிய இவர்கள் 

யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த நிலையில் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் குறித்த தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வழித்தடங்கள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டு ஆபத்திருப்பின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு