யாழ்.மாநகரில் உள்ள மீன் சந்தைகளில் இருந்து எழுமாற்றாக தேர்வு செய்யப்பட்ட 30 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை..! மக்களின் அச்சத்தை தணிக்க நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட மீன் சந்தைகளில் மீன் வியாபாரம் செய்வோரில் எழுமாற்றாக தொிவு செய்யப்பட்ட 30 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

பேலியகொடை மீன் சந்தையை தொடர்ந்து திருகோணமலை மீன் சந்தைநியில் விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் சிலரில் கொரோனா தொற்று இனம் கானப்பட்டதனாலும் 

நுகர்வோர் இது தொடர்பில் அச்சம் கொள்வதனை தடுக்கும் நோக்கிலுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குருநகர், பாசையூர், சின்னக்கடை, நாவாந்துறை, கல்வியங்காடு உள்ளிட்ட 6 மீன் சந்தைகளில்

இருந்து தலா 5 பேர் எழுமாற்றாக தேர்வு செய்யப்பட்டு  முதல் கட்டமாக இந்த பரிசோதனை இடம்பெற்றது. இவ்வாறு மேற்கொண்ட பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இல்லை என்றால்,

தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சந்தைகள் இயங்கும். இவ்வாறான பரிசோதனைகள் அடுத்த கட்டமாக மரக்கறி சந்தைகள் மீதும் தொடர்வது தொடர்பிலும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு