ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் நடந்த திருமணம்..! தடுத்து நிறுத்திய பொலிஸார், தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட திருமணம் பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தொிவித்திருக்கின்றார். 

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, திருமண விழாவிற்கு கிட்டத்தட்ட 35 விருந்தினர்கள் கூடியிருந்தனர். மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும் திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவின் போது திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகள் உட்பட அனைத்து பொது விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் முன்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு