முஸ்லீம் மக்கள் மீளவும் மீள் குடியமர்த்துவதற்கான ஒழுங்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளவில்லை

ஆசிரியர் - Editor IV
முஸ்லீம் மக்கள் மீளவும் மீள் குடியமர்த்துவதற்கான ஒழுங்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளவில்லை

யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் மீளவும் மீள் குடியமர்த்துவதற்கான  ஒழுங்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளவில்லை என யாழ்  மாநகர சபை உறுப்பினர் கே.எம் நியாஸ்( நிலாம்) தெரிவித்துள்ளார்.

கடந்த யுத்த அனர்த்தம் காரணமாக 1990 ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் 30 ஆண்டுகளுக்கு பின்னரும் சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படவில்லை என்பதை கருத்திற்கு கொண்டு இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒக்டோபர் 25 ஆம் திகதியுடன் முஸ்லீம் மக்கள் இடம்பெயர்ந்த 30 வருட நிறைவை முன்னிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் இவ்வேண்டுகோளை கேட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிற்கு  தற்போது  எதுவும் ஒழுங்காக நிறைவேற்றப்படவில்லை.2010ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 9 வருடங்களாக நான் எமது மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளில் நான் கவனம் செலுத்தி வருகின்றேன் இதற்கு எமது  மக்கள்  சாட்சியாக இருக்கின்றார்கள்.முஸ்லிம் சமூகத்திலே பல பராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தமக்கான அதிகார எல்லைகளைக் கொண்டிருக்கின்றார்கள்.கடந்த காலங்களில் பல  மீள்குடியேற்றத்திற்கான நடமாடும் சேவைகள் எனது  முயற்சியினால்  நடைபெற்றன.

இந்நடமாடும் சேவையின் ஊடாக    யாழ் முஸ்லிம் சமூகத்தின்   வீட்டுத்திட்டம் காணியற்றோரது பிரச்சினைகள் வாழ்வாதாரம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து நாம் தற்போது  தீவிர கவனம் செலுத்துகின்றேன். என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு