யாழ்.காங்கேசன்துறை கடற்படைமுகாமில் 250 கடற்படையினர் தனிமைப்படுத்தலில்..! 140 பேருக்கு முதற்கட்ட பீ.சி.ஆர் பரிசோதனை நிறைவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை கடற்படைமுகாமில் 250 கடற்படையினர் தனிமைப்படுத்தலில்..! 140 பேருக்கு முதற்கட்ட பீ.சி.ஆர் பரிசோதனை நிறைவு..

யாழ்.காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் இரு கடற்படை சிப்பாய்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அங்கு 250 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் முதற்கட்டமாக 140 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்றில்லை. என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

எனினும் தொடர்ச்சியாக அவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதுடன், 3 கட்ட பீ.சி.ஆர் பரிசோதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படவுள்ளதுடன், 

மிகுதியாக உள்ளவர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

Radio