சட்டவிரோத மணல் அகழ்வு..! மதில் இடித்து வீழ்ந்ததில் ஒருவர் பலி, யாழ்.கிழக்கு அரியாலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor

அரியாலை கிழக்கு - உதயபுரம் பகுதியில் மதில் இடிந்துவிழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே மதில் இடிந்து விழுந்துள்ளது.

அரியாலைப் பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு இடம்பெற்று வந்த நிலையில் 

இன்று அதிகாலை நான்கு முப்பது மணியளவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவர் 

மீது மதில் இடிந்து விழுந்துள்ளது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

விசாரணைகளை யாழ்ப்பாணபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Radio