“குரங்கு கையில் பூமாலை..” ஆழிகுமரன் நினைவாக பலகோடி செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை..!

ஆசிரியர் - Editor I
“குரங்கு கையில் பூமாலை..” ஆழிகுமரன் நினைவாக பலகோடி செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை..!

யாழ்.வல்வெட்டித்துறையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. 

இலங்கைக்கு மட்டுமல்லாது உலகத்துக்கே பெருமை தேடித்தந்த ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக அமைக்கப்பட்ட வல்வெட்டித்துறை நீச்சல் தடாகம் 

யாரும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது. மங்கள சமரவீர நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் நிதிஒதுக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட குறித்த நீச்சல் தடாகம்

தமிழ் தேசியக்கட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆளுமையற்ற நிர்வாகத்தினால் மக்கள் மயப்படுத்தப்பட்ட குறித்த நீக்க தடாகத்தை 

உரியமுறையில் பராமரிக்க முடியாத திராணியற்ற சபையாக வல்வெட்டித்துறை நகரசபை விளங்குகிறது. ஆகவே குறித்த நீச்சல் தடாகத்தை தனியாரிடமோ 

அல்லது சமூக நிறுவனங்களிடமும் ஒப்படைத்து உரிய முறையில் பாதுகாத்து அதன் பயன்பாட்டை மக்களுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு