SuperTopAds

காரைதீவு பிரதேச சபை கழிவு சேகரிப்புத் திட்டம் போன்று யாழ் மாநகர சபை பகுதியில் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

ஆசிரியர் - Admin
காரைதீவு பிரதேச சபை கழிவு சேகரிப்புத் திட்டம் போன்று யாழ் மாநகர சபை பகுதியில் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் கழிவு சேகரிப்புத் திட்டம் போன்று யாழ் மாநகர சபை பகுதியில் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மாநகர சபைக்கு தெரிவாக சமூக சேவகர் கே.எம் நிலாம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த   இத்திட்டத்தை இம்முறையாவது  யாழ்  மாநகர சபையில்  நடைமுறைப்படுத்துவதன் ஊடாக  85மூ வீத பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டுவர முடியும் என அவர்  சுட்டிக்காட்டினார்.

அதிகளவான குப்பைகள் யாழ் மாநகர சபையில் தேங்கி கிடப்பதுடன் அவை உரிய நேரத்திற்கு அகற்றப்படாமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

  குறித்த இத்திட்டம் காரைதீவு பிரதேச சபை சிறப்பாக செயற்படுத்தி குப்பை கூழங்களை உடனுக்குடன் அகற்றி வருகின்றது.எனவே  இத்திட்டத்தின் ஊடாக  ஒவ்வொரு வீட்டிற்கும் கழிவு சேகரிப்பதற்கான பைகள் வழங்கப்படுவதுடன்அவை ஒவ்வொன்றிலும் வீட்டு உரிமையாளரின் பெயர் மற்றும் வீட்டு இலக்கம் குறிக்கப்பட்டுள்ளது.

இது போன்று எமது பகுதியிலும் அதை நான் அமுல் படுத்த நடிவடிக்கை மேற்கொள்வேன்.

அத்துடன் அங்கு  உக்கும் கழிவு உக்காத கழிவு என இரு வேறு சேகரிப்பு பைகளும் வழங்கப்படுவதுடன்  ஒவ்வொரு வாரத்திலும் வியாழக் கிழமைகளில் இக்கழிவுகளை எடுப்பதற்கு பிரதேச சபை ஊழியர்கள் வருகைதருகின்றனர்.

இதற்காக  3மாதங்களுக்கு ஒரு தடவை சேவைக் கட்டணமாக ரூபா 150  குறித்த காரைதீவு நகர சபையினால்   அறவிடப்படுகின்றது.

இவ்வாறாக எமது யாழ் மாநகர சபையில் தேங்கி கிடக்கின்ற குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வேன் என கூறினார்.