போலி ஆவணங்கள் அச்சிடும் நிலையம் முற்றுகை..! அதிர்ச்சியில் பொலிஸார், கொரோனா தனிமைப்படுத்தல் சான்றிதழ் , நீதிபதிகளின் முத்திரைகள் உள்ளிட்ட பல ஆவணங்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
போலி ஆவணங்கள் அச்சிடும் நிலையம் முற்றுகை..! அதிர்ச்சியில் பொலிஸார், கொரோனா தனிமைப்படுத்தல் சான்றிதழ் , நீதிபதிகளின் முத்திரைகள் உள்ளிட்ட பல ஆவணங்கள் மீட்பு..

போலி ஆவணங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனையிட்ட நிலையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கின்றது. 

கொழும்பு - மருதானை பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் என்ற பெயரில் குறித்த போலி ஆவண தயாரிப்பு நிலையம் இயங்கிவந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பொலிஸார் நடத்திய சோதனையில், கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அதனை நிறைவு செய்தமைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 

சான்றிதழும் கூட அச்சிடப்பட்டுள்ளதுடன், நீதிபதிகள், பாடசாலை அதிபர்கள் உட்பட பல முக்கிய உயர் பதவிகளில் உள்ளோரின் 220 போலி முத்திரைகளும் 

மேலும் 297 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு