யாழ்.கீரிமலையில் வீடு புகுந்து கொள்ளை..! பொலிஸாரிருக்கு கூறினால் வீடு புகுந்து கொலை செய்வோம் என அச்சுறுத்தல், இருவர் கைது, நகைகள், வாள்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.கீரிமலை பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கூரிய ஆயுதத்தை காட்டி அச்சுறுத்தி நகைகளை கொள்ளையிட்டதுடன், கொள்ளை சம்பவம் குறித்து பொலிஸாருக்கு முறையிட்டால் கொலை செய்வோம் என அச்சுறுத்தி சென்ற இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

அண்மையில் கீரிமலை பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அதிபர் ஒருவரின் வீட்டுக்குள் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த இருவர் அதிபரையும், மனைவியையும் அச்சுறுத்தி சுமார் இரண்டரை பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றதுடன், தாம் 10 பேர் சிறையிலிருந்து வெளியில் வந்திருப்பதாகவும், 

கொள்ளை சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்தால் வீடு புகுந்து கொலை செய்வோம் என அச்சுறுத்தியுள்ளனர். இதனால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுப்பதை அதிபர் தவிர்த்திருந்த நிலையில் புலனாய்வு பிரிவு பொலிஸாார் இந்த விடயத்தை அறிந்துள்ளதுடன், 

காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீர, தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உப பொலிஸ் பரிசோதகர் நிதர்ஷன் தலைமையிலான பொலிஸ் பிரிவிடம்ஒப்படைத்தார். அந்தப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் காங்கேசன்துறை கொல்லங்கலட்டியைச் சேர்ந்த 19, 23 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட இரண்டரைப் பவுண் தங்க நகைகளும் 720 மில்லிக்கிராம் ஹெரோயினும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டது. சந்தேக நபர்கள் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு