செம்மணி மயானத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு..! கைது செய்யப்பட்ட ஆவா குழு ரவுடியிடம் நடத்திய விசாரணை அடிப்படையிலாம்..

ஆசிரியர் - Editor

யாழ்.கல்வியங்காடு பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவை சேர்ந்த மற்றொரு ரவுடி வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ்.செம்மணி பகுதியில் உள்ள மயானத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபரின் வாக்கு மூலத்துக்கு அமைய இந்து மயானத்தை சோதனையிட்ட போலீசார் குறித்த வெடி பொருட்களை மீட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு 

இந்து மயானத்தில் உள்ள வெடி பொருட்கள் மீட்கும் நடவடிக்கைகள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இனைந்து முன்னெடுத்தனர்.இந்து மயாணத்தில் மேற்கொண்ட அகழ்வில் மிதி வெடி ஒன்றையும் கைக்குண்டு ஒன்றையும் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரனைகளை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Radio