யாழ்.மாவட்ட சின்ன வெங்காய செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! 300 மில்லியன் ஒதுக்கியது அரசு..

ஆசிரியர் - Editor
யாழ்.மாவட்ட சின்ன வெங்காய செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! 300 மில்லியன் ஒதுக்கியது அரசு..

யாழ்.மாவட்டத்தில் சின்ன வெங்காய செய்கையாளர்களுக்கு மானியம் வழங்குதற்காக 300 மில்லியன் ரூபாய் நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. 

மத்திய விவசாய அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1050 மில்லியன் ரூபாய் நிதியில் 300 மில்லியன் ரூபாய் நிதி வடமாகாண விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள சின்ன வெங்காய செய்கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Radio