SuperTopAds

சிரிய படுகொலைகளுக்கு எதிராக மன்னாரில் கண்டனப் போராட்டம்!

ஆசிரியர் - Admin
சிரிய படுகொலைகளுக்கு எதிராக மன்னாரில் கண்டனப் போராட்டம்!

சிரியாவில் இடம்பெற்று வரும் படுகொலைகளைக் கண்டித்து இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கண்டனப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்தப் போராட்டம் இடம் பெற்றது.

குறித்த போராட்டத்தில் மூர்வீதி ஜீம்மா பள்ளி வாசல் மௌலவி எம்.அசீம், மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன், மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.