ஒக்டோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் 10 வீத கழிவு அறவீடு நிறுத்தம்..! யாழ்.மாவட்ட சந்தைகளிலில் இருந்து தரகர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்ட பொது சந்தைகளில் விவசாயிகளின் உற்பத்திகளுக்கு 10 வீதமான கழிவு அறவிடப்படும் நடைமுறை அக்டோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் முற்றாக நீக்கப்படும் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விவசாயிகளின் உற்பத்திகளுக்கு கழிவு அறவிடப்படும் நடைமுறை நீக்கப்பட்டு தரகர்கள் துரத்தியடிக்கப்படவேண்டும் என உத்தரவிட்டிருந்தார். 

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய குழுவின் தலைவர் விளக்கமளிக்கையில், இந்த 10 சதவீத கழிவு அறவிடப்படுவதனை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் உடனடியாக கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது.

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இந்த நடைமுறை கைவிடப்படும். விவசாயிகளின் கோரிக்கைக்கு இதன்மூலம் தகுந்த தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்தார். விவசாய அமைச்சர் தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 

மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 10 சதவீதகழிவு அறவிடப்படுவது எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்துநிறுத்தப்படும் என்று மாவட்டச் செயராளர் க. மகேசன் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு