யாழ்.செம்மணி பகுதியில் நரிகள் நடமாட்டம் அதிகரிப்பு..! வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை..

ஆசிரியர் - Editor

யாழ்.செம்மணி மயானத்தை அண்டிய வயல்வெளிகளில் நரிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 

குறித்த நரிகள் அப்பகுதிக்கு எவ்வாறு வந்தன என்பது தொடர்பிலும், அதனால் மனிதர்களிற்கு ஆபத்து ஏற்படுமா என்பது தொடர்பிலும் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. 

இவற்றால் வீட்டு வளர்ப்புக்களான கோழி, ஆடு உள்ளிட்டவற்றுக்கு பாதிப்புக்கள் ஏற்படுமிடத்து வாழ்வாதாரத்திலும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த காட்டு விழங்குகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Radio