சிரமதான பணிகளுக்கும் பொலிஸார் தடை..! திலீபனின் நினைவேந்தல் நாட்களில் செய்யகூடாதாம்..

ஆசிரியர் - Editor
சிரமதான பணிகளுக்கும் பொலிஸார் தடை..! திலீபனின் நினைவேந்தல் நாட்களில் செய்யகூடாதாம்..

தியாகி திலீபனின் நினைவேந்தலை ஒட்டி திலீபனின் நினைவு துாபி அமைந்துள்ள சுற்றாடலில் சூழலியல் மேம்பாட் அமையத்தினர் மேற்கொண்ட சிரமதான பணிகள் பொலிஸாரினால் நடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

பிறிதொரு நாளில் சிரமதான பணியினை முன்னெடுக்குமாறும் நினைவுத்தூபியை அண்மித்த பகுதியில் பொலிஸாரே சுத்தம் செய்யும் பணியை செய்வர் எனக்கூறி தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இப்பகுதியில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் புகைப்படங்களை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Radio