ஆவரங்கால் பகுதியில் அதிகாலையில் வீடு புகுந்து வாள்வெட்டு..! 26 வயது இளைஞனுக்கு கால் மற்றும் கழுத்து பகுதியில் வெட்டு..

ஆசிரியர் - Editor

யாழ்.புத்துார் ஆவரங்கால் பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் விஜயராசா விஜிதரன் (வயது26) என்ற இளைஞனே கால் மற்றும் கழுத்து பகுதியில் வாள்வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இரு மோட்டார் சைக்கிள்களில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

Radio