தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான அலங்காரங்கள், உருவப்படங்கள் இரவோடு இரவாக அகற்றம்..! யாழ்.பல்கலைகழகத்திலிருந்தும்..

ஆசிரியர் - Editor I

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடை உத்தரவு பெறப்பட்டதை தொடர்ந்து நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள திலீபனின் நினைவு துாபியிலிருந்த அலங்காரங்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டிருக்கின்றது. 

தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது.இந்த நிலையிலேயே அலங்காரங்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது. இந்த அலங்காரங்களை இளைஞர்கள் கடந்த ஒரு வாரமாக அமைத்து வந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இடத்தையும் கோப்பாய் பொலிஸார் அகற்றியுள்ளனர். தியாக தீபம் திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி 

ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உணவு ஒறுப்பை ஆரம்பித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார். 

ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உணவு ஒறுப்பிலிருந்த பனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26ஆம் திகதி வீரச்சாவடைந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு