யாழ்.கோண்டாவில் பகுதியில் 15 வயது சிறுமி கடத்தல்..! சிறுமி மீட்பு, முறைப்பாடு கொடுக்க சென்றபோது சிறுமி மீது பொலிஸார் தாக்குதல், பெற்றோருக்கு அச்சுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவில் பகுதியில் 15 வயது சிறுமி கடத்தல்..! சிறுமி மீட்பு, முறைப்பாடு கொடுக்க சென்றபோது சிறுமி மீது பொலிஸார் தாக்குதல், பெற்றோருக்கு அச்சுறுத்தல்..

15 வயதான பாடசாலை சிறுமியை கோண்டாவில் இ.போ.ச சாலை முன்பாக இன்று காலை 7.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற குடும்பஸ்த்தர் ஒருவர் மீண்டும் 3.30 மணிக்கு அதே பகுதியில் கொண்டுவந்து இறக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு கொடுக்க சென்ற சிறுமியின் குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸாரினால் அச்சுறுத்தப்பட்டிருப்பதுடன், 15 வயது சிறுமி மீத பொலிஸ் பரிசோதகர் தாக்குதல் நடத்தியுள்ளார். 

புத்துார் ஆவரங்கால் பகுதியை சேர்ந்தவர் என அறியப்படும் குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு சிறுமியை இன்று காலை கடத்தி சென்றிருக்கின்றார். பொலிஸாரின் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலை தொடர்ந்து

சிறுமியும் பெற்றோரும் வீடு திரும்பிய நிலையில் சிறுமியின் வீட்டிற்கு இன்று இரவு சென்றிருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முறைப்பாடு கொடுக்க பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தாஜா பண்ணியுள்ளார். 

எனினும் சிறுமியின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் பொலிஸாரின் நடவடிக்கையினை கடுமையாக கண்டித்துள்ளதுடன் முறைப்பாடு வழங்க பொலிஸ் நிலையத்திற்கு வரப்போவதில்லை என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு