மலட்டு மருந்து விவகாரம் ஹோட்டலில் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் உரிமையாளர்!
அம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை விரிவாகத் தெரிவித்துள்ளார்.
தங்கள் கடையில் பராட்டா சாப்பிக் கொண்டிருந்த சிங்கள வாடிக்கையாளர் ஒருவர், பராட்டாவினுள் திரண்ட நிலையில் காணப்பட்ட கோதுமையினை, வேறு ஏதோ ஒரு பொருள் எனக் கூறி முரண்பட்டு – தம்மைத் தாக்கியதாக ஹோட்டல் உரிமையாளர் பர்சித் கூறியுள்ளார்.
மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தினை தாம் அந்த நபருக்கு வழங்கியதாகவும், தான் அதனை ஏற்றுக் கொள்வதாகவும் வெளியாகியுள்ள வீடியோ குறித்து தெளிவுபடுத்திய ஹோட்டல் உரிமையாளர் பர்சித்; “அந்த நபர் என்னிடம் சிங்களத்தில் ஏதோ கூறி “தெம்மாத” (போட்டாயா) என்று கேட்டார். ஆனால், அவர் சிங்களத்தில் கூறிய அந்த வார்த்தைக்கான அர்த்தம் எனக்கு விளங்கவில்லை” என்றும் விபரித்தார்.
இந்த சம்பவத்தினை அடுத்து, அன்றைய தினம் இரவு ஹோட்டல் உரிமையாளர் பர்சித் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மறுநாள் செவ்வாய்கிழமை வரை, தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்று நடந்த சம்பவத்தை, ஆரம்பம் முதல் முடிவு வரை ஹோட்டல் உரிமையாளர் பர்சித் விபரித்தன் வீடியோ பதிவை கீழே காணலாம்.