கண்ணீருடன் விடைபெற்றார் மாமனிதர் அமரர் ரவிராஜின் மனைவி..! நீதி கோருவேன் என ஊடகங்களுக்கு கருத்து..

ஆசிரியர் - Editor I
கண்ணீருடன் விடைபெற்றார் மாமனிதர் அமரர் ரவிராஜின் மனைவி..! நீதி கோருவேன் என ஊடகங்களுக்கு கருத்து..

மாமனிதர் அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா ராவிராஜ் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அவர் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 2ம் இடத்தில் இருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியானபோதும், 

அவர் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டதுடன், வாக்கெண்ணும் நிலையத்திற்குள் இடம்பெற்ற குழப்பத்தினால் அவருடைய மருமகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது அதிரடிப்படை தாக்குதல் நடத்தியிருந்ததை தொடர்ந்து, 

அவரும் அவருடைய பிள்ளைகள், உறவினர்கள், ஆதரவாளர்கள் கண்ணீருடன் விடைபெற்று சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அங்கிருந்த பலருடைய மனங்களை உறுத்தும் சம்பவமாக அமைந்திருந்தது. 

பின்னர் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த சசிகலா விருப்பு வாக்கில் 2ம் இடத்தில் உள்ளதாக வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து அறிவிக்கப்பட்டபோதும், 

பின்னர் தாம் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டதாக கூறியதுடன், இது குறித் கட்சி தலைவர் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோரிடம் முறையிட்டு நீதியை கோரவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு