யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை கடற்கரைபகுதியில் பதற்றம்..! பொலிஸார், படையினர் குவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை கடற்கரைபகுதியில் பதற்றம்..! பொலிஸார், படையினர் குவிப்பு..

யாழ்.உடுத்துறை கடற்பகுதியில் சட்டத்திற்குமாறாக டைனமைற் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த வெளிமாநட்ட மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலையடுத்து அப்பகுதியில் பொலிஸார், படையினர் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

இன்று செவ்வாய் கிழமை இரவு 8.30 மணியளவில் உடுத்துறை கடற்பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் டைனமைற் பயன்படுத்தி மீன்பிடித்துள்ளனர். இதனையடுத்து உடுத்துறை மீனவர்களுக்கும், வெளிமாவட்ட மீனவர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

இதனையடுத்து பொலிஸார் மற்றும் படையினர் உடுத்துறை கடற்கரை பகுதியில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் சட்டத்திற்கு மாறாக டைனமைற் பயன்படுத்தி சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன் வெளிமாவட்ட மீனவர்களால் பிடிக்கப்பட்டிருப்பதாக உடுத்துறை மீனவர்கள் கூறியுள்ளதுடன், 

சட்டத்திற்குமாறாக தொழில் செய்பவர்களை பாதுகாப்பதற்காகவே பொலிஸாரும், இராணுவமும் குவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு