டிப்பர் வாகனத்தின் பெட்டி விழுந்ததில் பழுது பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் உடல் நசுங்கி பலி..! யாழ்.நீர்வேலியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor
டிப்பர் வாகனத்தின் பெட்டி விழுந்ததில் பழுது பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் உடல் நசுங்கி பலி..! யாழ்.நீர்வேலியில் சம்பவம்..

யாழ்.நீர்வேலி பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் வாகனம் பழுது பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் மீது டிப்பர் வாகனத்தின் சுமை பெட்டி விழுந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளான். 

குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் சுமை பெட்டியை ஜக் மூலம் துாக்கிவிட்டு அதன் கீழிருந்து பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது ஜக் நழுவி சுமைப்பெட்டி இளைஞன் மீது விழுந்துள்ளது. 

சம்பவத்தில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.