கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நடத்துகிறீர்களா..? தமிழ்தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இராணுவத்தால் முற்றுகை..!

ஆசிரியர் - Editor

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தை சுற்றிவளைத்த பெருமளவு படையினர் மற்றும் பொலிஸார் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நடக்கிறதா? என ஆராய்ந்துள்ளனர். 

சுமார் 100 வரையான படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு முற்றுகை சோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. 

இன்று கரும்புலி நாள் என்பதால் குறித்த அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலேயே மேற்படி முற்றுகை நடத்தப்பட்டுள்ளது. 

என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இன்று காலை காலை அலுவலகத்திற்கு வந்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 

உள்ளிட்டவர்கள் கரும்புலி நினைவேந்தல் நடத்தக் கூடாது என்று எங்களையும் எச்சரித்து சென்றுள்ளனர் என்றார்.