சிவாஜிலிங்கம் சற்றுமுன் வல்வெட்டித்துறையில் கைது..! நீதிமன்ற உத்தரவு என கூறும் பொலிஸார் மேலதிக தவல்களை கூற மறுப்பு..

ஆசிரியர் - Editor
சிவாஜிலிங்கம் சற்றுமுன் வல்வெட்டித்துறையில் கைது..! நீதிமன்ற உத்தரவு என கூறும் பொலிஸார் மேலதிக தவல்களை கூற மறுப்பு..

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

இன்று காலை 9.30 மணியளவில் வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார். மேலும் நீதிமன்ற உத்தரவின் பெயரிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறும் பொலிஸார், 

மேலதிக விபரங்களை வெளியிட மறுத்துள்ளனர்.