பட்டப்பகலில் வயதான பெண்மணியை தள்ளி விழுத்தி தாலி கொடியை அறுத்து சென்ற திருடர்கள்..! யாழ்.பொற்பதி வீதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor
பட்டப்பகலில் வயதான பெண்மணியை தள்ளி விழுத்தி தாலி கொடியை அறுத்து சென்ற திருடர்கள்..! யாழ்.பொற்பதி வீதியில் சம்பவம்..

யாழ்.கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியால் சென்ற வயோதிப பெண்ணின் 9 பவுண் தாலி கொடியை திருடர்கள் அறுத்து சென்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த வீதியால் பயணித்த வயோதிப பெண்ணை பின்தொடர்ந்த திருடர்கள் அவரை தள்ளி விழுத்தி தாலி கொடியை அறுத்து சென்றிருக்கின்றனர். அறுக்கப்பட்ட தாலிக்கொடி 9 பவுண் என கூறப்படுகின்றது. 

இந்த சம்பவம் மக்கள் நடமாட்டம் மற்றும் சன நொிசல் மிக்க பொற்பதி வீதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.