வேலை முடிந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி தாக்குதல்..! பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் நேற்றிரவு சம்பவம்..

ஆசிரியர் - Editor
வேலை முடிந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி தாக்குதல்..! பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் நேற்றிரவு சம்பவம்..

வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் மீது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், பொதுமக்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் நேற்று இரவு பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றிருக்கின்றது. அப்பகுதியில் சலுான் ஒன்றில் பணிபுரியும் குறித்த இளைஞன் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே

வாள்வெட்டு கும்பல் அவர் மீத தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.