மக்கள் மாறாதவரை மக்களின் துன்பம் மிகுந்த வாழ்க்கையும் மாறாது..! மாறுங்கள் மாற்றத்திற்கு கைகொடுங்கள்..

ஆசிரியர் - Editor I
மக்கள் மாறாதவரை மக்களின் துன்பம் மிகுந்த வாழ்க்கையும் மாறாது..! மாறுங்கள் மாற்றத்திற்கு கைகொடுங்கள்..

30 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் வலிகாமம் வடக்கு மக்களுக்கு சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் அல்லது, சொந்த இடங்களில் மீள்குடியேறும்வரை அமைதியானதும் பாதுகாப்பானதுமான இருப்பிடத்தை ஒரு வருடத்தில் பெற்றுக் கொடுப்போம். 

அத்தகைய மாற்றத்தை விரும்புகிறவர்கள், மாற்றத்தை உருவாக்க கூடிய தமிழர் விடுதலை கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும். அதன் ஊடாக மட்டுமே சாதிக்க முடியும். இப்போது எல்லாம் செய்யலாம் என பலர் வருவார்கள். ஆனால் அவர்கள் கடந்தமுறை பெற்ற மக்கள் ஆணையை கொண்டு என்ன செய்தார்கள்? என்பதை சிந்தித்து மாற்றத்துக்கு முயற்சியுங்கள். 

மேற்கண்டவாறு தமிழர் விடுதலை கூட்டணியின் வேட்பாளர் அ.அரவிந்தன் கூறியுள்ளார். இன்று மாலை மல்லாகம் பகுதியில் வலி,வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது மக்கள் சார்பில் பல குறைபாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. 

குறிப்பாக பொருளாதார பிரச்சினைகள், பாதுகாப்பான இருப்பிடமின்மை, மீள்குடியேற்றம் இன்மை, சுகாதார வசதிகள் இன்மை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கூறப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே அரவிந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

போருக்கு பின்னான 10 வருடங்களில் நீங்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் எந்தவொரு பொருளாதார முன்னேற்றத்தையும் காணவில்லை. இப்போதும் வலி, வடக்கில் மட்டுமல்ல வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

கடந்த 10 வருடங்களாக அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் அறவே இல்லாத நிலையில் பல கிராமங்கள் இருந்து கொண்டிருக்கின்றது. எனவே கடந்த 10 வருடங்கள் மக்கள் ஆணை பெற்றவர்கள் என்ன செய்தார்கள்? இதை மக்கள் சிந்திக்கவேண்டும். ஆணை கொடுத்தார்கள், பதவி கொடுத்தார்கள், பேசும் சக்தியை கொடுத்தார்கள்.

இத்தனையும் கொடுத்த மக்களுக்கு என்ன கிடைத்தது? ஒன்றுமில்லை. ஆகவேதான் நாங்கள் மாற்றத்தை கேட்கிறோம். இங்கே எமது பிரதேசங்களில் தேனும், பாலும் ஓடும் அளவுக்கு செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களை நிராகரியுங்கள் என நாங்கள் கேட்கவில்லை. மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை அழித்து,

அந்த நம்பிக்கை விற்கு தங்கள் பிழைப்பை பார்த்துக் கொண்டவர்களை நிராகரியுங்கள். மாற்றத்தை கொண்டுவாருங்கள் என கேட்கிறோம். அதில் தவறேதும் இருப்பதாக தொியவில்லை. ஆகவே ஒரு வருடத்தில் மக்கள் கூறிய சகல குறைகளையும் நிவர்த்தி செய்வோம். மீள்குடியற்றம் அல்லது மீள்குடியேற்றம் செல்லும்வரையில் 

பாதுகாப்பான, வசதிகளுடன் கூடிய இருப்பிடம். மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான வழிகள் என அனைத்தையும் பெற்றுக் கொடுப்போம். அதற்கு முதலில் மக்களிடம் மனமாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தின் ஊடாக ஒரு சந்தர்ப்பத்தை எமக்கு வழங்குங்கள் என்றார். 



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு