ஏறிவந்த ஏணியை உதைத்து விட்டு செல்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புகாரர்கள் அங்கஜன் கருத்து!

ஆசிரியர் - Admin
ஏறிவந்த ஏணியை உதைத்து விட்டு செல்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புகாரர்கள் அங்கஜன் கருத்து!

இந்த ஜனாதிபதியை தெரிவு செய்யப் போவது தமிழர்களுடைய வாக்கு என கூறியிருந்தார்கள், அதே நேரம் நாங்கள் இன்னொரு விடயத்தினை இன் நம்பி இருந்தோம் இந்த ஜனாதிபதி அவர்கள் வந்திருந்தால் இந்த ஊருக்கும் இந்த வீதிக்கும் வெள்ளை வான் வரும் கூறியிருந்தார்கள், கிரீஸ் பூதம் வரும் என்றார்கள், முதலைப் வரும் என்றார்கள் ஆனால் வந்ததா ? கடந்த காலத்தில் வைத்து முன்பு நடந்தவையை வைத்து நாங்கள் நம்பி இருந்தோம். அவை அனைத்தும் நடந்ததா? இரண்டும் நடக்கவில்லை நாங்கள் எதிர்பார்த்த ஜனாதிபதியும் வரவில்லை..... இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன். யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ...

கடந்த காலங்களில் எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்று நான் சொல்வேன் ஆனால் கடந்த நான்கரை வருடங்கள் நல்லாட்சி அரசாங்கம் என்று சொன்னார்கள் நல்லாட்சி அரசாங்கம் மூலம் எல்லாம் கிடைத்துவிடும் என்றும் சொன்னார்கள். அது உரிமையாக இருக்கட்டும் அல்லது அபிவிருத்தியாக இருக்கட்டும் அல்லது எமது இனத்தினுடைய இருப்பாக இருக்கட்டும் ஆனால் நல்லாட்சி அரசாங்கம் எங்களை கைவிட்டு விட்டது. நாங்கள் எதிர்பார்த்த தீர்வு கிடைக்கும் என்று சம்பந்தன் ஐயா சொன்னார்! எங்களுக்கு தீபாவளிக்கு தீர்வு வரும் பொங்கலுக்கு தீர்வு வரும்! புது வருடப் பிறப்புக்கு தீர்வு வரும் !என்று பல்வேறு தீர்வுகளை எங்களுக்கு சொல்லியிருந்தார். ஒவ்வொரு தீபாவளிக்கும் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம் ஏதாவது தீர்வு வருமா என்று ? வந்ததா? இல்லை இன்று எங்களுக்கு தீர்வும் கிடைக்கவில்லை. அடுத்ததாக நாங்கள் அபிவிருத்தியினை எதிர்பார்த்தோம், அது வீதி அபிவிருத்தி இல்லை. சகல துறைகளிலும் அபிவிருத்தியே. ஆனால் கிடைத்தது ஆறுதல் பரிசு கம்பெரலிய என்ற திட்டம் தான் கிடைத்தது அது. எல்லாருக்கும் கிடைத்தது என்று சொன்னால் அது ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்தது,அது ஒரு சில மதத்தினருக்கு கிடைத்தது, அது ஒரு சில அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு கிடைத்தது, அது ஒரு கிராமத்தில் பல ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்திவிட்டது.

 நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் எதிர்பார்த்தோம் எங்கள் இனத்தினுடைய இருப்பை தக்க வைக்கப்படும் என அதுவும் நடக்கவில்லை. மக்களாகிய நீங்கள் இவ்வளவு கஷ்டத்திலும் இவ்வளவு துன்பத்திலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வாக்குகளை அளித்துள்ளீர்கள். உரிமைக்காக நீண்டகாலம் போராடிய மக்கள் என்ற ரீதியில் நீங்கள் அவர்களுக்கு வாக்குகளை அளித்து இருந்தீர்கள். உரிமையை எடுத்து தருவதாக உங்களுக்கு ஒருவர் நம்பிக்கை ஊட்டும் பொழுது அதற்காக நாங்களும் வாக்களித்தோம்.  கடந்த காலத்தில் எங்களுக்காக போராடியவர்கள் தானே இந்த உருவாக்கிய கட்சி என்று கூறினார்கள் ஆதனால் நாங்கள் வாக்களித்தோம். உங்களுக்கு தெரியும் தமிழரசுக் கட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் யார் என !  தற்பொழுது அந்த கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள் "எங்களை உருவாக்கியவர்கள் போராடவில்லை” என்று கூறும் கருத்தும் உள்ளது.  அதாவது ஒரு மனிதன் முன்னேறி வரும் பொழுது வந்த பாதையினை மறப்பவன் மனிதனே இல்லை. ஏறிவந்த ஏணியை உதைத்து விட்டு செல்பவன் மனிதாபிமானமற்றவன். அப்படிப்பட்டவர்கள்தான் அங்கு உள்ளவர்கள் .

வாய்ப்பு கிடைத்ததா இல்லையா என்பது தொடர்பில் ஒரு கேள்வி உள்ளது. வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் அதனை விட்டுவிடலாம் அது எங்களுக்கு செய்யமுடியவில்லை என்று. நல்லாட்சி காலம் என்று சொன்னார்கள் அதில் வாய்ப்புகளும் ஏராளம் வந்தது, நம்பிக்கையில்லாத தீர்மானம் ஏராளம் வந்தது, பட்ஜெட் வந்தது, நம்பிக்கை இல்லாத தீர்மானம் வரும் பொழுதோ அல்லது பட்ஜெட் வரும் பொழுதோ பல்வேறு நிபந்தனைகளை இவர்கள் வைத்திருக்க முடியும். நிபந்தனைகளை வைத்தார்கள்  மக்கள் சார்ந்த இருப்புக்களை தக்க வைக்கக்கூடிய நிபந்தனைகள் ஆக இருக்கவில்லை வைத்த நிபந்தனைகள் தனிப்பட்ட நிபந்தனைகளகவே இருந்தது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு