நீதிமன்ற கட்டளையை கண்டதும் தப்பி ஓட முயன்றபோது விபத்தில் சிக்கிய பூசகர்..! கொலை முயற்சியுமில்லை, தாக்குதலுமில்லை. புலுடா அம்பலம்..

ஆசிரியர் - Editor I
நீதிமன்ற கட்டளையை கண்டதும் தப்பி ஓட முயன்றபோது விபத்தில் சிக்கிய பூசகர்..! கொலை முயற்சியுமில்லை, தாக்குதலுமில்லை. புலுடா அம்பலம்..

நீதிமன்ற கட்டளையை வாங்க மறுத்து மோட்டார் சைக்கிளில் ஓடியபோது விபத்தில் விழுந்த பூசகர் தன்னை சிலர் தாக்கியதாக புலுடா விட்ட சம்வம் கடந்தமாதம் 23ம் திகதி புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய பூசகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், புன்னாலைக்கட்டுவன் தெற்கு சனசமூக நிலையத்தினர் நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 

அவ்வாறு தாக்குதல் ஒன்றும் நடக்கவில்லை. நீதிமன்ற கட்டளையை வாங்க மறுத்த பூசகர் மோட்டார் சைக்கிளில் ஓடியபோது விபத்தில் சிக்கியே காயமடைந்ததாக சனசமூக நிலையத்தினர் கூறியுள்ளனர். 

இது தொடர்பாக மேலும் அவர்களது அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 23ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவமானது கொலை முயற்சி என செய்திகள் வெளியாகியிருந்தது. இதில் எந்த உண்மையுமில்லை. 

கடந்த 23ஆம் திகதி மேல் நீதிமன்றத்தால் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலய பூசகருக்கு எதிராக நீதிமன்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இக்கட்டளை கையளிப்பதற்காக நீதிமன்ற பிஸ்கால் அவர் வீட்டுக்கு சென்ற வேளை அந்த கட்டளையை வாங்க மறுத்த குறித்த ஆதீனகர்த்தா தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயற்சித்துள்ளார். 

இதனை அவதானித்த பிஸ்கால், அவரின் பின்னால் சென்றுள்ளர். புன்னாலைக்கட்டுவனில் உள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்திற்கு அண்மையில், பூசகர் தனக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டபோது 

பின்னால் சென்ற பிஸ்காலின் மோட்டார் சைக்கிளுடன் மோதி, இருவரும் விபத்திற்குள்ளானார்கள். இது தொடர்பாக நீதிமன்றத்தில் பிஸ்கால் முறையிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு