யாழ்.கரவெட்டியில் திருமண மண்டபம் 14 நாட்களுக்கு இழுத்து பூட்டப்பட்டது..! கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியின் உத்தரவு..

ஆசிரியர் - Editor
யாழ்.கரவெட்டியில் திருமண மண்டபம் 14 நாட்களுக்கு இழுத்து பூட்டப்பட்டது..! கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியின் உத்தரவு..

யாழ்.கரவெட்டி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் 14 நாட்களுக்கு விழாக்கள், நிகழ்வுகளை நடாத்த சுகாதாரதுறை தடைவிதித்திருக்கின்றது. 

குறித்த மண்டபத்தில் நேற்றய தினம் திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது அங்கு சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாததுடன், 

சமூக இடைவெளியை பேணாது, முக கவசம் அணியாது மக்கள் கலந்து கொண்டிருப்பதுடன், திருமண நிகழ்வை நடாத்துவதற்கு முன் அனுமதியும் பெறப்படவில்லை. 

இந்நிலையில் குறித்த மண்டபத்தில் 14 நாட்களுக்கு நிகழ்வுகள், விழாக்களை நடாத்த கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Radio