கருணாவைக் காப்பாற்றும் அரசு அரசியல் கைதிகளை கண்டுகொள்ளாதது ஏன்?

ஆசிரியர் - Admin
கருணாவைக் காப்பாற்றும் அரசு அரசியல் கைதிகளை கண்டுகொள்ளாதது ஏன்?

கருணாவுக்கு வக்காலத்து வாங்கும் அரசாங்கம், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“ கருணாவின் தகவல்களைக் கொண்டே புலிகளை அழித்ததாகவும், அவர் காப்பாற்றப்பட வேண்டியவர் எனவும் ஆளும் தரப்பில் இருக்கக் கூடிய பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

கருணாவின் வரலாறு இரகசியமானதல்ல என்று பிரதமரும், எதிர் எதிர் கட்சியினருக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கெனவே கருணா என்பவர் மஹிந்த தரப்பினரால் அழகுபார்க்கப்பட்டவர் தான் .

உங்களது தேவைக்கேற்ப நீதியை உங்களால் வாங்க முடியுமாக இருந்தால், சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம் காட்டுகின்றீர்கள் எனவும் சுரேஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு