கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களை முட்டாளாக்கும் முயற்சியையே மேற்கொண்டு வருகின்றது : அங்கஜன்!

ஆசிரியர் - Admin
கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களை முட்டாளாக்கும் முயற்சியையே மேற்கொண்டு வருகின்றது : அங்கஜன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து கொண்டு செய்யாத ஒன்றை இனி எவ்வாறு செய்யப் போகின்றதென முன்னாள் விவசாய பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களை முட்டாளாக்கும் முயற்சியையே மேற்கொண்டு வருகின்றது எனவும், முன்னாள் விவசாய பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குறித்து இவ்வாறு கருத்தத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கை சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும், முன்னாள் விவசாய பிரதியமைச்சருமான அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட வேட்பாளர்கள் இன்றையதினம் சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டனர்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக சர்வமதத் தலைவர்களை சந்தித்து ஆசி பெறும் நிகழ்வுகள் இன்று காலை 9 மணிக்கு தவத்திரு வேலன் சுவாமி ஆச்சிரமத்திலிருந்து ஆரம்பமாகியிருந்தன.

அதனையடுத்து தவத்திரு வேலன் சுவாமியைச் சந்தித்ததைத் தொடர்ந்து யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, நாகவிகாரை பீடாதிபதியையும் சந்தித்த முன்னாள் விவசாய பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் அவரிடம் ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, முஹமதியா ஜூம்மா பள்ளிவாசல் மஹ்மூத் மௌலவியையும் சந்தித்து முன்னாள் விவசாய பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு