பெண் அதிகாரி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்.

ஆசிரியர் - Editor I
பெண் அதிகாரி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்.

யாழ் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடைமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரினால் கொழும்பு வெளிவிவகார அமைச்சில் கடைமை யாற்றும் பெண் அதிகாரி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவம் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் வெளிவிவகார அமைச்சில் கடைமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரின் முகநூலின் மூலம் நட்பாகி தனது உறவினர் ஒருவர் கனடா செல்ல விசா எடுத்து தருமாறு; முயற்சி மேற்கொண்டுள்ளார். 


இதற்கமை வெளிவிவகார அமைச்சின் அலுவலர் கனடா தூதுவராலயத்திற்கு அமைச்சினூடாக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் ஆயினும் சமுர்த்தி உத்தியோகத்தரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் ஆவணங்கள் தவறானவை, போலியானவை என கூறி குறித்த ஆவணங்களை 

தூதுவராலயம் அவரது வீட்டு விலாசத்துக்கு திருப்பி அனுப்பியது.


இதனையடுத்து முகநூலில் நட்பாக இருந்த வெளிவிவகார அமைச்சு உத்தியோகத்தரை தொலைபேசியூடாக அச்சுறுத்தியதோடு தனது உறவினர் நண்பர்கள் மூலமும் பல தடவைகள் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.


 இது தொடர்பில் விசாரணை நடாத்த அமைச்சு அதிகாரிகள் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரை கொழும்பு அமைச்சுக்கு அழைத்த போதும் அவர் கொழும்பு செல்லவில்லை.எஇதனையடுத்து வெளிவிவகார அமைச்சின் அதிகாரியினால் சமுர்த்தி உத்தியோகத்தரை கைது செய்யுமாறு கோரி பொலீசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு