தமிழ், சிங்கள மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

ஆசிரியர் - Editor I
தமிழ், சிங்கள மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவின் போது, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.


எதிர்வரும்  23 ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி 24 ஆம் திகதி பெருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.


இந்த திருவிழாவின் போது, முதன் முதலாக சிங்க மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இம்முறை காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க கலந்துகொண்டு சிங்கள மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளார்.


இம்முறை இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்கொள்ளவுள்ளதுடன், சிங்கள மக்களும்; அதிகமாக கலந்துகொள்ளும் காரணத்தினால், சிங்கள மொழியில் முதன் முதலாக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன. 


இதே வேளை இத் திருப்பபலி ஒப்பக்கொடுத்தல் இதுவரை காலமும் தமிழ் மொழியில் மாத்திரம் இடம்பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு