வலிகாமம் மேற்கு பிர­தேச சபையின் தவி­சா­ளரானார் தர்­ம­லிங்கம் நட­னேந்­திரன்..!

ஆசிரியர் - Admin
வலிகாமம் மேற்கு பிர­தேச சபையின் தவி­சா­ளரானார் தர்­ம­லிங்கம் நட­னேந்­திரன்..!

வலிகாமம் மேற்கு பிர­தேச சபையின் தவி­சா­ள­ராக தர்­ம­லிங்கம் நட­னேந்­திரன் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.


நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் வலி­காமம் மேற்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் போட்­டி­யிட்­ட­வர்­களில் 9 பேர் வெற்றி பெற்­றுள்­ளனர். இத­ன­டிப்­ப­டையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்­ற­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் கடந்த சனிக்­கி­ழமை யாழ்.மார்ட்டின் வீதியில் அமைந்­துள்ள இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்­றது.


இந்தக் கலந்­து­ரை­யா­டலின் போது வலி­காமம் மேற்கு பிர­தேச சபையின் தவி­சா­ள­ராக இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் அராலி தெற்கு மூலக் கிளையின் தலை­வரும் முன்னாள் பிர­தேச சபையின் உறுப்­பி­ன­ரு­மான தர்­ம­லிங்கம் நட­னேந்­திரன் (கஜன்) தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­துடன், உப தவி­­சாள­ராக புளொட் அமைப்பின் சார்பில் வேலையா சச்­சி­தா­னந்தன் தெரிவு செய்­யப்­பட்டார்.


மேலும் இப் பிர­தேச சபையில் விஸ்­வ­லிங்கம் உமா­பதி, தம்­பிப்­பிள்ளை சிவ­சுப்­பிரமணியம், சண்­மு­க­நாதன் ஜெயந்தன், தர்­ம­லிங்கம் துரை­லிங்கம், பர­ம­சிவம் பிள்ளை, சிற்­றம்­பலம் ஸ்ரீஜீவா, கந்­தையா லங்­கேஸ்­வரன் ஆகியோர் கூட்­ட­மைப்பின் சார்பில் வெற்­றி­யீட்­டி­ய­வர்­களாவர்.


இந்த தவி­சாளர் தெரிவில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா, புௌாட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ கட்சி சார்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு